சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை தொடர்ந்தும் குறைந்து வருவதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரத்தில் சில்லறை சந்தையில் இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயத்தின் விலை 150 முதல் 160 ரூபா வரையான விலைகளில் விற்பனை செய்யப்பட்டது.
நேற்றைய நிலவரப்படி, உள்ளூர் பெரிய வெங்காயம் 240 ரூபாவுக்கு குறைவான பெறுமதியில் காணப்பட்ட அதேவேளை, இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயம் 170 ரூபாவுக்கும் குறைவான பெறுமதியில் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பல பொருளாதார மையங்களில், இந்த பெறுமதி 140 முதல் 150 ரூபா வரை பதிவாகியிருந்தது.
கடந்த வாரம் ஒரு கிலோகிராம் உள்ளூர் உருளைக்கிழங்கு 440 ரூபாவாக இருந்தது, இந்த வாரத்தில் அதன் விலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் இல்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பல மலையக மரக்கறிகளின் விலைகள் இன்னும் உயர்வாகவே உள்ள, அதேவேளை போஞ்சி 400 முதல் 500 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று பல பொருளாதார நிலையங்களில் ஒரு கிலோகிராம் கறி மிளகாயின் விலை 600 ரூபாவாக இருந்தது.
கரட் 250 முதல் 300 ரூபா வரையிலும், வெண்டைக்காய் 300 முதல் 400 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.
குறிப்பாக தென்னிலங்கையில் இருந்து வருவிக்கப்படும் மரக்கறிகளின் விலைகள் சற்று குறைந்துள்ளதுடன், பூசணிக்காய் 80 முதல் 100 ரூபா வரையிலும், கத்தரிக்காயின் விலை 250 ரூபாவிற்கும் குறைவாக பதிவாகியுள்ளது.
