நேபாளத்தின் லும்பினி சர்வதேச பௌத்த அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் வணக்கத்திற்குரிய மைத்திரி தேரரால் நன்கொடையாக வழங்கப்பட்ட 100 மில்லியன் ரூபாவிற்கும் (ரூ. 10 கோடி) அதிக பெறுமதியான மருந்துப் பொருட்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவிடம் இன்று (27) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இவை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
சர்வதேச லயன்ஸ் கழக 306 C2 பலாங்கொடை கிளையின் கோரிக்கையின் பிரகாரம் இம்மருந்துப் பொருட்கள் பலாங்கொடை ஆதார வைத்தியசாலைக்கு ஒப்படைக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர, வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் இரேஷா பத்திரகே மற்றும் சர்வதேச லயன்ஸ் கழக 306 C 2 முன்னாள் லயன்ஸ் தலைவர் லசந்த குணவர்தன, ஏ.பி ஜகத்சந்திர, டபிள்யூ.கே.என் விஜேசூரிய, சுனில் ஒபேசேகர, சிங்ஹ சமன் குமார ஹெட்டியாரச்சி உள்ளிட்ட அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர்.