சிரேஷ்ட பிரஜைகள், மாணவர்களுக்கு மிருகக்காட்சிச்சாலைகளை பார்வையிடல் இலவசம்

பாடசாலை மாணவர்கள் மற்றும் சிரேஷ்ட பிரஜைகளுக்கு எதிர்வரும் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் மிருகக்காட்சி சாலைகளை இலவசமாக பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக விலங்கியல் பூங்கா திணைக்களம் தெரிவித்துள்ளது. இரண்டு தினங்கள் அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் 23 ஆம் திகதி பாடசாலை மாணவர்கள் மிருகக்காட்சிசாலைகளை பார்வையிட முடியுமென்றும் அன்றைய தினம் மாணவர்களுக்கான விசேட நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, எதிர்வரும் 24 ஆம் திகதி 60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகள் மிருகக்காட்சிச் சாலைகளைப் பார்வையிட முடியும் என்றும் அத்துடன் கிறிஸ்மஸ் தினமான எதிர்வரும் 25 ஆம் திகதி மிருகக்காட்சிச் சாலைகளில் விசேட நிகழ்ச்சிகள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாகவும் அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Exit mobile version