கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நபர் ஒருவரை காணவில்லை

நேற்று (19) பிற்பகல் குறித்த நபர் பலாலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அந்தோனிபுரம் கடற்றொழிலாளர் சங்கத்திற்கு சொந்தமான படகில் அந்தோணிபுரம் பகுதிக்கு அருகில் மீன்பிடிக்க சென்றுள்ளார்.

பலாலி பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், காணாமல் போனவர் அந்தோணிபுரத்தை சேர்ந்த 56 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

காணாமல் போனவரை தேடும் நடவடிக்கையை கடற்படையினரும் பொலிஸாரும் ஆரம்பித்துள்ளனர்.

Exit mobile version