இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கை

அரசியலமைப்பு பேரவைக்கு முன்வைக்கப்படும் வேட்பு மனுக்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரியுள்ளது.

பக்கச்சார்பின்றி அந்த பேரவைக்கு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி, பிரதமர், சபநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளிடம் அந்த சங்கம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

அரசியலமைப்பு பேரவைக்காக மேற்கொள்ளப்படும் சகல நியமனங்களும், பொதுமக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், குறித்த பேரவைக்காக நியமிக்கப்படும் பிரதிநிதிகள் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய மற்றும் நற்பெயருடன் கூடியவராக இருத்தல் அவசியம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு பேரவை ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர், சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கான தவிசாளர்கள் மற்றும் அங்கத்தவர்கள் பெயரிடும் முறைமை வெளிப்படைதன்மையுடன் இருத்தல் அவசியம் என்றும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version