கஞ்சிப்பானை இம்ரான் பிணையில் விடுதலை !

supreme -court-srilanka-newsinfirst

supreme -court-srilanka-newsinfirst

கஞ்சிப்பானை இம்ரானை தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வாழைத்தோட்டம் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தொலைபேசியில் அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகநபரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொலை மற்றும் மரண அச்சுறுத்தல்கள் தொடர்பில் நான்கு நீதிமன்றங்களில் சந்தேகநபருக்கு எதிரான வழக்குகள் நிலுவையில் உள்ளது.

பாதாள உலக கும்பலை சேர்ந்த மாகந்துரே மதுஷின் மகளின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.

இரண்டு வருடங்களுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்த சந்தேக நபர், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version