ஊடகவியலாளருக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் அமைச்சர் பந்துல
நாட்டின் அனைத்து ஊடகவியலாளர்களும் சகல துறைகளிலும் அறிவுமிக்கவர்களாக செயற்படவேண்டியது அவசியமாகும். அது சமூகத்தின் முன்னேற்றத்திற்கு மிக அவசியமென ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
ஊடகத்துறை அமைச்சின் ‘அசிதிஸி’ ஊடகவியலாளர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் வைபவம் நேற்று ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்டவின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பதிதியாகக் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்கி உரையாற்றும் போது அமைச்சர் பந்துல குணவர்த்தன இவ்வாறு தெரிவித்தார்.
நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், அறிவு வளர்ச்சியடைந்து வரும் உலகிலேயே நாம் வாழ்கின்றோம். அந்தவகையில் நாட்டின் ஊடகவியலாளர்கள் அனைத்து துறையிலும் அறிவுமிக்கவர்களாக செயற்படவேண்டியது அவசியமாகும். அது சமூகத்தின் முன்னேற்றத்திற்கு மிக முக்கியமாகும்.
நாட்டின் சுதந்திர போராட்டத்தின் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளன. அந்த வகையில் 56ஆம் ஆண்டுக்குப்பின்னரும் ஊடகங்கள் நாட்டுக்கு வரலாற்று ரீதியான பங்களிப்பைச் செய்துள்ளன. பல்வேறு பேதங்களைக் கலைந்து அறிய பணிகளை மேற்கொள்வதற்காக லேக் ஹவுஸ் நிறுவனம், டி,ஆர்.விஜயவர்தனவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. மார்டின் விக்கிரமசிங்க போன்றோர் பத்திரிகை ஆசிரியர்களாக அர்ப்பணிப்புள்ள சேவை செய்துள்ளதை குறிப்பிட முடியுயென்றும் அவர் தெரிவித்தார்.
