நாடளாவிய ரீதியில் நாளை இரண்டு மணித்தியாளங்கள் மின்வெட்டு-

நாடளாவிய ரீதியில் நாளை (வெள்ளிக்கிழமை) இரண்டு மணிநேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டினை அமுல்படுத்துவதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களில் பகலில் ஒரு மணித்தியாலமும், இரவில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதுவேளை எதிர்வரும் 24, 25, 26 ஆம் திகதிகளில் 3 நாட்களுக்கு மின்வெட்டு அமுப்படுத்தப்படமாட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 31ஆம் மற்றும் ஜனவரி முதலாம் திகதிகளிலும் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என்றும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version