ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக 200 மேலதிக பஸ்கள், 8 விஷேட ரயில்கள் சேவையில்

பண்டிகைக் காலங்களில் கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்காக இலங்கை போக்குவரத்துச் சபையின் பல பேருந்துகள் மற்றும் புகையிரதங்கள் கொழும்புக்குச் செல்வதற்கும் அங்கிருந்து புறப்படுவதற்குமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இன்று (24) முதல் 27 ஆம் திகதி வரை 200 மேலதிக பஸ்கள் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் என இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

இதேவேளை, நத்தார் பண்டிகைக்காக கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்காக 8 விஷேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

Exit mobile version