நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி காணாமல்போனோரின் உறவினர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

கொழும்பில் உள்ள காணாமல் போனோர் அலுவலகத்திற்கு முன்பாக நேற்று (வியாழக்கிழமை) இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

உண்மையைக் கண்டறியும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட காணாமல்போனோரின் உறவினர்கள் பலர், காணாமல்போன தமது உறவுகளின் புகைப்படங்களையும் பதாதைகளையும் கைகளில் ஏந்தி, கோசமெழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின்போது குறித்த பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version