அமெரிக்காவில் பனிப்புயலில் சிக்கி 60 பேர் பலி

அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் குளர்காலத்தில் பனிப்புயல் வீசுவது வழக்கம். பனிப்பொழிவு காரணமாக நியூயோர்க் நகர வீதிகள் அனைத்தும் பனி மூடிக் கிடக்கின்றன. குறைந்தபட்சம் சுமார் 25 சென்டி மீட்டர் உயரத்துக்கு வீதிகளை பனி மூடிக்கிடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களும் பனியால் மூடப்பட்டு நகரமே வெண்பனி மூட்டமாக காணப்பட்டது. வெப்ப நிலை பூச்சியத்திற்கும் கீழ் சென்றதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால் வீதிகள் வெறிச்சோடி மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அமெரிக்காவின் பல மாகாணங்களிலும் கடுமையான பனிப்புயல் வீசியது. இதன் காரணமாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட வீதியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து வீதிகளை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் பனிப்புயலில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சை அளிக்கவும் அரசு ஏற்பாடு செய்தது. மேலும் பனிப்புயல் கடுமையாக தாக்கிய பகுதிகளுக்கு மீட்பு படையினர் சென்று அங்கு சிக்கியுள்ள மக்களை மீட்டு வருகிறார்கள். மேலும் பனிப் புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடவங்களையும் மீட்டு வருகிறார்கள். நியூயார்க்கின் பப்பேலா பகுதியில் பனிக் கட்டிகளுக்கு அடியில் ஏராளமான சடலங்கள் புதைந்து கிடந்தன. அவற்றை மீட்புக் குழுவினர் மீட்டனர்.

பனிப்புயலில் சிக்கி இதுவரை பொதுமக்கள், பெண்கள் உள்பட 60 பேர் பலியாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Exit mobile version