பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பெற்றோலிய பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்டம் தற்போது நடைமுறையில் உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் 26 ஆம் திகதி முதல் இந்த சட்டம் அமுல்படுத்தப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.
மதிப்பீட்டைத் தொடர்ந்து, பெற்றோலியப் பொருட்களை விற்பனை செய்வதற்கான புதிய சில்லறை விற்பனையாளர்களுக்கு இந்தாண்டு இறுதிக்குள் உள்நாட்டு சந்தைக்குள் நுழைய அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் விஜேசேகர தெரிவித்தார்.
