வனிதா தான் இனி ராதிகாவா? பாக்கியலட்சுமி சீரியல் பற்றி பரவும் செய்திக்கு தயாரிப்பாளர் விளக்கம்

வனிதா

நடிகை வனிதா விஜயகுமார் பிக் பாஸுக்கு பிறகு தற்போது படங்கள், டிவி நிகழ்ச்சிகள், சீரியல்கள் என கிடைக்கும் வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி வருகிறார். அதே நேரத்தில் அவர் சொந்தமாக பெண்களுக்கான ஒரு துணி கடையையும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் ராதிகாவாக நடித்து வரும் ரேஷ்மா வெளியேறுகிறார் என்றும், அவருக்கு பதில் வனிதா விஜயகுமார் தான் இனி ராதிகாவாக நடிக்க போகிறார் என்றும் செய்தி பரவி வருகிறது.

உண்மையா?

பரவி வரும் செய்தி துளி கூட உண்மை இல்லை என்றும், ரேஷ்மா தான் தொடர்ந்து ராதிகா ரோலில் நடித்து வருகிறார் என்று தெரிவித்து உள்ளனர்.  

Exit mobile version