பிக் பாஸ் 6 டைட்டிலை வென்ற அசீம் முன்னாள் போட்டியாளரான வனிதா விஜயகுமாரை சந்தித்து பேசியிருக்கிறார்.
பிக் பாஸ் 6 நிகழ்ச்சி துவங்கியதில் இருந்து அது பற்றி சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளித்து வந்தார் வனிதா விஜயகுமார். பிக் பாஸ் டைட்டிலை அசீம் வென்றபோது வாழ்த்தினார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்திருக்கும் விக்ரமனுக்கு ஒரு நாள் வாக்களிப்பேன் என்றார் வனிதா. இந்நிலையில் வனிதா விஜயகுமாரை சந்தித்து பேசியிருக்கிறார் அசீம்.
யாருக்கும் முன்னதாரணமாக இருக்க நாம் இங்கு இல்லை. ரூல்ஸை பிரேக் பண்ணத் தான் இருக்கிறோம் என்று கூறி தான் அசீமுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் வனிதா. தம்பியை சந்தித்து பேசிய சந்தோஷத்தை தன் ஆதரவாளர்களுடன் ஷேர் செய்து கொண்டார் வனிதா. ஆனால் அந்த புகைப்படங்களை பார்த்த சமூக வலைதளவாசிகள் வனிதாவை கிண்டல் செய்கிறார்கள்.
