சிலருக்கு அதிகாலையில் எழுவது என்பது பெரும் சிக்கலான விடயமாக இருக்கின்றது. அதிகாலையில் சீக்கிரம் எழுவது எப்படி என சில டிப்ஸ் உங்களுக்காக.
நம்மில் பலருக்கு அதிகாலையில் தான் நல்ல தூக்கம் வருவது போன்று இருக்கும்.
அதிகாலையில் சரியான நேரத்தில் சீக்கிரம் எழுந்திருப்பது தான் பல வெற்றியாளர்களின் மூல மந்திரம் என்று கூறலாம்.
நான்கு மணிநேரத்தில் இருந்து ஆறு மணிநேரத்திற்கு உட்பட்ட நேரத்தையே அதிகாலை என்று சொல்லுவார்கள்.
அதிகாலையில் சீக்கிரம் எழுவது எப்படி
தூங்க செல்வதற்கு தினமும் சரியான நேரத்தை கடைப்பிடித்தல்
இரவு தூங்க சரியான நேரத்திற்கு தூங்க சென்றால் தான் அதிகாலையில் நேரத்திற்கு எழ முடியும். அதற்காக ரொம்ப நேரத்திற்கு முன்னாடி தூங்க செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
பத்து மணிக்கு முன்னதாக அதாவது தூங்க செல்லசரியான நேரம் பத்து மணி சிறந்தது.
மொபைல்
தூங்க செல்லும் நேரத்திற்கு முன்னதாக மொபைல் பயன்படுத்தாதீர்கள். இன்றைய உலகில் இது ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கின்றது.
அதிக நேரம் மொபைல் பயன்படுத்திவிட்டு தூங்க செல்லும் போது தூக்கத்திற்கு தேவையான கோர்மோன் சுரப்பது தடைப்படுகின்றது.
மொபைல் பாவிப்பதை தூங்க செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக நிறுத்துவது சிறந்தது.
தூங்கும் போது மொபைல் போனை கொஞ்சம் தூரமாக வைத்து விட்டு தூங்கச் செல்வது நல்லது.
ஆரோக்கியமான போதியளவு தூக்கம் செய்தால் மட்டுமே அதிகாலையில் சீக்கிரம் சரியான நேரத்திற்கு எழ முடியும்.
நேர ஒழுங்கு
தினமும் சரியான நேர ஒழுங்கை கடைப்பிடியுங்கள். தூங்க செல்வதற்கும் அதிகாலையில் எழுவதற்கும் சரியான நேரத்தை கடைப்பிடியுங்கள்.
சரியான நேர ஒழுங்கை தினமும் கடைப்பிடிக்கும் போது நாளடைவில் தானாகவே உங்களால் அதிகாலையில் எழ முடியும்.
21 நாள்
தினமும் அதிகாலையில் எழுவதற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தை தீர்மானித்து அதனை 21 நாட்கள் செய்து வாருங்கள்.
எந்த ஒரு செயலையும் தொடர்ந்து 21 நாட்கள் செய்து வந்தால் நாளடைவில் அது ஒரு பழக்கமாக மாறி விடும்.
உணவு
சரியான தூக்கம் செய்ய வேண்டுமானால் கடுமையான உணவுகளை இரவுகளில் எடுத்துக் கொள்ளாதீர்கள். குறைந்த உணவுகளை இரவில் எடுத்துக் கொள்ளுங்கள்.
ஆக குறைந்தளவு உணவு எடுத்துக் கொண்டால் நடு இரவில் பசி எடுக்கும் ஆகவே மிதமான உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.
தூங்க செல்ல முன் தண்ணீர் அதிகமாக குடிக்காதீர்கள். இது இரவு நேரங்களில் சிறுநீர் கழிக்க வழி வகுக்கும்.
ஆழ்ந்த உறக்கம் என்பது வேறு மயக்கம் என்பது வேறு ஆழ்ந்த உறக்கமே சிறந்த தூக்கம். ஆழ்ந்து உறங்கினால் தான் அதிகாலையில் சரியான நேரத்திற்கு எழுந்திட முடியும்.
அலாரம்
படுக்கைக்கு அருகில் அலாரம் வைத்தால் அலாரம் அடிக்கும் போது அதை நிறுத்தி விட்டு மறுபடியும் உறங்கச் செல்வது வடிக்கையாகிவிடும்.
உங்கள் படுக்கையில் இருந்து சிறிது தூரம் தொலைவில் அலாரம் வையுங்கள். நீங்கள் அலராமை நிறுத்த எழும்பி செல்லும் போதே உங்கள் தூக்கமும் கலைந்து விடும்.
அதிகாலையில் எழுந்து நேர்மறை எண்ணத்தோடு உங்கள் குறிக்கோள்களை அடைய முயற்சி செய்யுங்கள் வெற்றி கிடைக்கும்.