டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு !

வருடத்தின் முதல் 3 மாதங்களில் மட்டும் நாடளாவிய ரீதியில் 19 ஆயிரத்து 877 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதத்தில் 5,109 பேரும் பெப்ரவரியில் 6,383 பேரும் ஜனவரியில் 7,393 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தின் முதல் 3 மாதங்களில் பதிவான டெங்கு நோயாளர்கள் 11 ஆயிரத்து 827 பேர் பதிவாகியிருந்ததாகவும் அறிவித்துள்ளது.

Exit mobile version