சூரியனின் வடக்கு நோக்கிய இயக்கத்தின் காரணமாக கடந்த ஏப்ரல் 5 ஆம்திகதியிலிருந்து 15 ஆம்திகதிவரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம்கொடுக்கவுள்ளது.
இத்தகவலை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று (07) மதியம் 12:13 மணியளவில் கொரலவெல்ல, இங்கிரிய, கிரியெல்ல, எம்புல்தெனிய, ஹல்துமுல்ல, ரத்மல்வெஹர மற்றும் வரதெனியாவ பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
