✨ மாகாண, உள்ளூராட்சி சபைகளுக்கு நடத்த ஜனாதிபதி ரணில் ஆராய்வு.
✨ வடக்கு, கிழக்கில் ஆரம்பிக்க உத்தேசம்.
மாகாண மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை கட்டம் கட்டமாக நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் ஆலோசித்து வருகிறார்.
முதற்கட்டமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மேற்படி இரண்டு தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்தி பின்னர் ஏனைய மாகாணங்களில் அவற்றை நடத்த ஜனாதிபதி ரணில் உத்தேசித்துள்ளார்.
இது தொடர்பில் கடந்தவாரம் சட்ட ஆலோசனைகளை நடத்தியுள்ள ரணில், பாராளுமன்றத்தில் இதற்கான சட்ட அங்கீகாரத்தை பெறும் ஏற்பாடுகளை முன்னெடுக்க தனது சட்ட ஆலோசகர்களை பணித்துள்ளதாக அறியமுடிகின்றது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் திட்டமிட்டபடி நடக்காமல் இழுபறியாகியுள்ளது. அதேபோல மாகாண சபைத் தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டு நிர்வாகம் ஆளுநரின் கீழ் செயற்படுகிறது. இவை இரண்டுக்குமான தேர்தலை கட்டம் கட்டமாக நடத்தினால் நிதி நிலைமைக்கேற்ற வகையில் அவற்றை மேற்கொள்ளலாமென ஜனாதிபதிக்கு ஆலோசனை சொல்லப்பட்டுள்ளது.
