இரும்புக் கம்பியால் தாக்கி கணவன் பலி- மனைவி காயம்..!

குருநாகல், பிங்கிரிய பகுதியில் இரு தரப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டதில் கணவன் உயிரிழந்துள்ளதுடன் அவரின் மனைவி காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (11) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பிங்கிரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாகொல்லாகம பிரதேசத்தில் நபரொருவர் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

உயிரிழந்தவர் 52 வயதுடைய வல்லவ, நாகொல்லாகம பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

சம்பவத்துடன் தொடர்புடைய 41 வயதுடைய சந்தேக நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Exit mobile version