குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவரின் தங்க நகையை கொள்ளையிட்டு தப்பியோடிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டதாக தலங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குருந்துவத்தை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (11) காலை பஸ்ஸில் பணிக்குச் சென்ற குறித்த உயர் அதிகாரி, இசுருபாயவில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இறங்கி சிறிது தூரம் நடந்து சென்றுள்ளார்.
அப்போது வீதியில் காணப்பட்ட ஒருவர் (பொலிஸ் அதிகாரி) திடீரென குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரியைத் தாக்கி, அவரது கழுத்தில் காணப்பட்ட தங்க நகையை கொள்ளையிட்டு ஓடியுள்ளார்.
இதன்போது போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த தலங்கம பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சந்தேக நபரை துரத்திச் சென்று பிடித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
