மின்னல் தாக்கி சிறுவன் உயிரிழப்பு – இருவர் படுகாயம்

ருவன்வெல்ல பகுதியில் மின்னல் தாக்கியதில் 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இரண்டு சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ருவன்வெல்ல மாப்பிட்டிகம பிரதேசத்தில் நேற்று மாலை களனி ஆற்றில் குளித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்றபோதே இந்த அனர்த்ததிற்கு முகங்கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் காயமடைந்தவர்கள் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மின்னல் தாக்கி ருவன்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Exit mobile version