ஒருவர் பின் ஒருவராக சதத்தை பதிவு செய்த இலங்கை வீரர்கள்..!

MELBOURNE, AUSTRALIA - FEBRUARY 20: Dushmantha Chameera of Sri Lanka is congratulated by team mates after getting the wicket of Josh Inglis of Australia during game five of the T20 International Series between Australia and Sri Lanka at Melbourne Cricket Ground on February 20, 2022 in Melbourne, Australia. (Photo by Quinn Rooney/Getty Images)

அயர்லாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி இதுவரையில் 6 விக்கெட் இழப்பிற்கு 591 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட நிலையில் போட்டியை இடைநிறுத்தியுள்ளது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்ப்பில் தினேஸ் சந்திமால் 14 ஆவது சதத்தை பதிவு செய்துள்ளார்.

அத்துடன் இலங்கை அணி சார்ப்பில் சதீர சமரவிக்ரம தனது 1 ஆவது சதத்தை பதிவு செய்துள்ளார்.

அதனடிப்படையில் இலங்கை அணி சார்ப்பில் திமுத் கருணாரத்ன 179 ஓட்டங்களையும் குசல் மென்டிஸ் 140 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

அத்துடன் ஆட்டமிழக்காமல் தினேஸ் சந்திமால் 102 ஓட்டங்களையும் சதீர சமரவிக்ரம 104 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் Curtis Campher 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

Exit mobile version