மூன்றரை வயது குழந்தையின் உயிரைப் பறித்த வாகன விபத்து..!

கொடகம சந்தியில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் மூன்றரை வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ் விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த குழந்தையின் தாய், தந்தை மற்றும் சகோதரர் காயமடைந்த நிலையில் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நுகேகொடையில் இருந்து மதுலவ பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version