ஒரு இலட்சம் குரங்குகள் விவகாரம் – சீனா விளக்கமளிப்பு..!

இலங்கையில் இருந்து 100,000 குரங்குகளை கொண்டு வருவது தொடர்பில் எந்தவொரு தரப்பினரும் சீன அதிகாரிகளிடம் கோரிக்கையை முன்வைக்கவில்லை என சீன தூதரகம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

சீன தேசிய வனவியல் மற்றும் புல்வெளி நிர்வாகத்திடம் எந்தவொரு தரப்பினரும் அத்தகைய கோரிக்கையை முன்வைக்கவில்லை என சீன தூதரகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, வனவிலங்குகளின் பாதுகாப்பிற்கு சீனா எப்போதும் முன்னுரிமை அளிப்பதாகவும், இது தொடர்பான சர்வதேச பொறுப்புகளை நிறைவேற்றுவதில் தீவிரமாக பங்களிப்பதாகவும் சீன தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த 11ஆம் திகதி விவசாய அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், இலங்கை குரங்குகளை சீனாவிலுள்ள உயிரியல் பூங்காக்களுக்கு வழங்குமாறு சீன பிரதிநிதிகள் குழு ஒன்று கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 100,000 குரங்குகளை வழங்குவதற்கான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், இது தொடர்பான மேலதிக விடயங்களை ஆராய அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு குழுவொன்று நியமிக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

Exit mobile version