2022 மே 09ஆம் திகதி
சம்பவம்
மேலும் மூவர் அதிரடியாக
கைது CID ல் தடுத்து வைப்பு

நாட்டில்
கடந்த 2022
ஆம் ஆண்டு மே 9 ஆம் திகதி ஏற்பட்ட அமைதியின்மையின் போது, பஞ்சிகாவத்தைப் பகுதியில் பொலிஸ் வாகனத்தை சேதப்படுத்திய மற்றும் வாகனத்தின் பாகங்களுக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால், சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் மருதானை மற்றும்
கொழும்பு -12 ஆகிய பகுதிகளில் வசிப்பவர்களென அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேற்கொள் ளப்பட்ட விசாரணையையடுத்து, இவர்கள்
கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்கள்
நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட
தாக, பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version