அரசாங்க நிறுவனங்களில் தமிழ், சிங்கள மொழிகளில் சேவைகளை கோர எந்தவொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது என அறிவிப்பு

நாட்டிலுள்ள எந்தவொரு குடிமகனும் தமிழ் அல்லது சிங்கள மொழிகளில் அரசாங்க நிறுவனங்களிலிருந்த சேவைகளை பெற்றுக்கொள்ள முடியுமென்று பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் அனுராத விஜேகோன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மற்றும் சிங்கள மொழிகள் இரண்டும் அரசியலமைப்பில் அரசகரும மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், ஒரு குடிமகன்
இந்த நாட்டிலுள்ள அரசாங்க நிறுவனத்தில் சேவையைப் பெறும்போது, அவர்
அல்லது அவள் தனக்கு தேவையான சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு தமிழ் அல்லது சிங்கள மொழிகளில் கோரலாம்.

அந்த
உரிமை அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென்றும், அவர் தெரிவித்துள்ளார்.

அரச கரும மொழிக்
கொள்கையை அமுல்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கதகவல் திணைக்களத்தில் (19) நடைபெற்ற
விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த
போதே அவர் மேற்கண்டவாறு
தெரிவித்துள்ளார்.

தமிழ் மற்றும் சிங்களம் இரண்டும் தேசிய மொழிகளாகக் கருதப்படுவதாகவும் ஒரு நாடு என்ற வகையில் அரச துறையில் மட்டுமன்றி, வேறு எந்தப் பணியிலும் சிங்களம் மற்றும் தமிழ் இரண்டும் பிரதான மொழிகளாகும் என்றும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் அரச
கரும மொழிப் பாடத்தை கையாள்வதற்கான தனியான பிரிவொன்று இருப்பதாகவும் நாட்டின் அரச கரும மொழிக் கொள்கையை அரசியலமைப்பில் உள்ளடக்கி அதற்கு அதிமுக்கியத்துவம் வழங்குவதற்கு அரசியலமைப்பிலேயே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும்,
அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version