கொல்கத்தாவை வீழ்த்தி அசத்தல் வெற்றி முதல் இடத்தை பிடித்தது சென்னை சுப்பர் கிங்ஸ்

கொல்கத்தாவில் நேற்றிரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 33-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதின.

அதன்படி, சி.எஸ்.கே. அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 235 ஓட்டங்கள் குவித்தது.

இதையடுத்து, 236 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.

போட்டியின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் வெறும் 186 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

இதன்மூலம், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அசத்தலாக வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. 6 போட்டிகளின் முடிவில் சென்னை சுப்பர் கிங்ஸ் 8 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தில் இருந்தது.

இன்றைய 7-வது போட்டியில் அபாரமாக துடுப்பெடுத்தாடி வெற்றி பெற்றதை அடுத்து சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 10 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Exit mobile version