பாடசாலை மாணவர்களுக்கான புத்தகப் பைகள் மற்றும் காலணிகளின் விலையை குறைக்க விற்பனையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.
அதன்படி, எதிர்வரும் மே 23ஆம் திகதி முதல் புத்தகப் பைகள் மற்றும் காலணிகளின் விலையை குறைப்பதாக அவர்கள் உறுதியளித்துள்ளதாகவும்,
இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார். நாட்டில் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதையடுத்து, புத்தகப் பைகள் மற்றும் காலணிகளின் விலைகளும் வெகுவாக அதிகரித்தன
