குழாய் வெடிப்பு; கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர்வெட்டு

#sri lanka #water #board #Newsinfirst

#sri lanka #water #board #Newsinfirst

அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து செல்லும் நீர்க் குழாய் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக இன்று (28) இரவு 9.00 மணிவரை சில பகுதிகளுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனைத் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, கேட்டே, கடுவெல மாநகர சபை பகுதிகள், மஹரகம மற்றும பொரலஸ்கமுவ நகரசபை பகுதிகள், கொழும்பு 4, 5, 7 மற்றும் 8 ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version