கந்தப்பளையில் வீடுகளும், விவசாய நிலங்களும் பாதிப்பு..!

நுவரெலியா கந்தப்பளை பிரதேசத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் கல்பாலம் மற்றும் ஆறாம் கட்டை பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்த நிலையில, பெரும்பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

இவ்வாறு வெள்ள நீர் உட்புகுந்து பாதிப்புக்குள்ளானோர் உறவினர்களின் வீடுகளில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம சேவை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் அனர்த்தத்தினால் குறித்த பிரதேச விவசாய காணிகளிலும் வெள்ள நீர் நிரம்பி பயிர்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version