இந்த சம்பவத்தையடுத்து இன்று காலை 7 மணிக்கு பெற்றோர்கள் பாடசாலை அபிவிருத்திக் குழுவினர் பாடசாலைக்கு முன்னால் ஒன்றிணைந்து கூடிநின்று கடமையேற்கவரும் ஆசிரியர் சங்க தலைவரை பாடசாலைக்குள் அனுமதிக்க விடாது அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க காத்திருந்தனர்.
இதன்போது பாடசாலையில் கல்வி கற்பித்துவரும் ஆசிரியர் சக ஆசிரியர்களிடம் ஆசிரியர் சங்க தலைவரை கடமையேற்ற விடவேண்டாம் என கோரியதையடுத்து மற்றுமொரு ஆசிரியர் அவர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளதையடுத்து அவர் காயமடைந்த நிலையில் உடனடியாக பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்த பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படடுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக மட்டு தலைமையக பொலிசார் மேவதிக விசாரணை மேற் கொண்டுவருதுடன் கல்வி திணைக்களமும் ஒழுக்ககாற்று விசாரணையை மேற்கொண்டுள்ளது.
