இன்றையதினம் (04) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், வட மேல் மாகாணத்திலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், காலி, மாத்தறை காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு, கிழக்கு, ஊவா, வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ. இற்கும் அதிக ஓரளவு பலத்த மழைவீழ்ச்சியும், ஏனைய இடங்களில் சுமார் 50 மி.மீ. அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சியும் எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல் மற்றும் தெற்கு கடலோர பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு 40 – 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
