கோதுமை மாவின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் கோதுமை மாவின் விலையில் எவ்வித மாற்றமும் இடம்பெறவில்லையென, அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று (09) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர், இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவுக்கே விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மாவுக்கான சுங்க வரி 3% அதிகரித்துள்ளது. ஆனால் சந்தையில்  மாவின் விலை 10 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

“இது குறித்து மிகவும் தவறான செய்தி உலவுவதாக

மா உற்பத்தி நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன. நான், சம்பந்தப்பட்ட இரு நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகளை அழைத்தேன். மாவின் விலை ஐந்து ரூபா கூட அதிகரிக்கப்படவில்லை என்பதை பொறுப்புடன் அறிவிக்குமாறு அவர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டனர்.

Exit mobile version