ஜனாதிபதி ஆணைக்குழு அமைத்து விசாரணைகளை நடத்த கோரிக்கை

தாமரைக் கோபுரத்தை பார்வையிட வந்தவர்களின் எண்ணிக்கை சாதனை இலக்கை எட்டியது.

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கடந்த 05 மற்றும் 06 ஆம்  திகதிகளில் 20,883 உள்ளூர் சுற்றுலா பயணிகளும் 163 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் தாமரை கோபுரத்தை பார்வையிட வந்ததாக தாமரை கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இவர்களில், கடந்த 06 ஆம் திகதி மட்டும் 12,204 உள்ளூர் சுற்றுலா பயணிகளும், 76 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை தந்திருந்தனர்.

அத்துடன், தாமரை கோபுரம் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்ட பின்னர், அதிகளவான பார்வையாளர்கள் வருகை தந்த நாளாகவும் அன்றைய தினம் பதிவாகியமை விசேட அம்சமாகும்.

Exit mobile version