கம்பளையில் 22 வயதுடைய யுவதி மாயம்!

கம்பளையில் 22 வயதுடைய யுவதி ஒருவர் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ்சார் தெரிவித்துள்ளனர்.

பாத்திமா முனவ்வரா என்ற குறித்த பெண் கம்பளை-வெலிகல்ல பிரதேசத்தில் வசிப்பதோடு கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

குறித்த பெண் அப் பிரதேசத்தில் உள்ள மருந்தகம் ஒன்றில் பணிபுரிந்து வந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை எல்பிட்டிய பள்ளிவாசலில் இருந்து பெறப்பட்ட சி.சி.ரி.வி காட்சிகளின்படி, வெலிகல்ல நகரை நோக்கி சென்ற பின்னர் அவர் காணாமல்போயுள்ளதாக பொலிஸ்சார் தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து அவரைத் தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்வருவதாக பொலிஸ்சார் குறிப்பிட்டுள்ளனர்.

Exit mobile version