நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சீமெந்து விலை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீமெந்து மொத்த விற்பனையாளர்கள் இதனை அறிவித்துள்ளனர்.
சீமெந்து நிறுவனங்களின் அறிவித்தலுக்கமைய இவ்விலைக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், தற்போது ரூ. 2,750 ஆக விற்பனை செய்யப்படும் 50 கிலோ கிராம் நிறை கொண்ட சீமெந்து பொதியின் விலை ரூ. 150 இனால் குறைக்கப்பட்டு, ரூ. 2,600 ஆக இன்று (14) முதல் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
ஏனைய கட்டுமானப் பொருட்களின் விலைகளின் அதிகரிப்பு, வீட்டுக்கடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை உள்ளிட்ட விடயங்கள் காரணமாக சீமெந்துக்கான கேள்வி தற்போது 50% இனால் குறைவடைந்துள்ளதாக, சீமெந்து உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த விடயம் காரணமாக, நாட்டின் முன்னணி சீமெந்து உற்பத்தி நிறுவனமொன்று தனது 4 தொழிற்சாலைகளில் 3 இனை மூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
