மின் உற்பத்தித் துறைக்கு உலக வங்கியின் நிதியுதவி

நாட்டின் மின் உற்பத்தித் துறைக்கு உலக வங்கி வழங்கும் நிதியுதவி தொடர்பிலும் மின்சார சபை மறுசீரமைப்பு வேலைத்திட்டம் குறித்தும் உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கும் எரிசக்தி  மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேக்கரவுக்குமிடையில், விரிவான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

நாட்டின் காற்றலை மின்னுற்பத்தி செயற்றிட்டம் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ள புத்தாக்க மின்சக்தி உற்பத்தித் திட்டங்களுக்கு உலக வங்கி வழங்கும் நிதி ஒத்துழைப்புக்கள் பற்றி, இப்பேச்சில் கவனம் செலுத்தப்பட்டது.இவ்வாறான ஒத்துழைப்புக்க ளுக்கு அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் நன்றியும் தெரிவித்தார்.

மின்சாரத்துறையின் மறுசீரமைப்புத்திட்டம் மற்றும் மின் உற்பத்தித் துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மேற்படி பேச்சுவார்த்தையில் உலக வங்கியின் இலங்கை, இந்தியா, பூட்டான் மற்றும் பங்காளதேசுக்கான நிறைவேற்றுப் பணிப்பாளர் தலைமையிலான உயர்மட்டக் குழுவும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version