குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் 2 வான்கதவுகள் தன்னிச்சையாக திறப்பு – மக்களுக்கு எச்சரிக்கை!

குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் 2 வான்கதவுகள் தன்னிச்சையாக திறக்கப்பட்டுள்ளமையினால் ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான பொறியியலாளர் அறிவித்துள்ளார்.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த வான்கதவு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை திறக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வான்கதவுகள் புனரமைக்கப்பட்டு வருவதாகவும் எனினும் ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Exit mobile version