எரிபொருள் கோட்டாவில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது

எரிபொருள் கோட்டாவில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,

கையிருப்பில் உள்ள எரிபொருள் மற்றும் கொள்வனவிற்கான இயலுமை உள்ளிட்ட விடயங்களை கருத்திற்கொண்டு எரிபொருள் கோட்டா முறையில் மாற்றம் ஏற்படுத்தாதிருக்க திட்டமிடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

இதேவேளை சர்வதேச நிறுவனங்களின் முதலீடுகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், எரிபொருள் கோட்டா முறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படக்கூடுமென எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version