அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் வெளிநாட்டுப் பயணங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை

அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத்துடன் தொடர்புடைய எம்.பி.க்களின் வெளிநாட்டுப் பயணங்களை பாராளுமன்ற அமர்வு நாட்களிலும் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தின் போதும் கட்டுப்படுத்தும் முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது தொடர்பான பிரேரணை பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் முன்வைக்கப்பட்டது.

பாராளுமன்ற அமர்வுகள் மற்றும் வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது அரசாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவசர மருத்துவத் தேவைகள் அல்லது அரசாங்கத்தின் மிக அவசரமான வேலைகளின் போது மட்டுமே வெளிநாடு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று பிரதமரின் முன்மொழிவு கூறுகிறது.

Exit mobile version