குழந்தைகள் மற்றும் பொது மக்களை நேரடியாக சூரிய ஒளி வெளிச்சத்தை பார்க்க வேண்டாம் என ‘தேசிய கண் மருத்துவமனையின் சிரேஷ்ட மருத்துவர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே இன்று கேட்டுக்கொண்டார்.
ஏனெனில் இது அவர்களின் கண்களை நேரடியாக பாதிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், சூரிய ஒளி நேரடியாகப் படும் பட்சத்தில் கண்கள் பாதிக்கப்படும்.
நல்ல தரமான சன்கிளாஸ்களை அணியுமாறும், நேரடி சூரிய ஒளியில் கண்களை வெளிப்படுத்தாமல் இருக்க தொப்பிகளை அணியுமாறும் மருத்துவர் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
“நேரடி சூரிய ஒளியை அதிகமாக வெளிப்படுவது கண் நோய்கள் மற்றும் பிற பிரச்சனைகளின் அபாயத்தை எழுப்புகிறது, மேலும் சில கண் நிலைகளை சன்கிளாஸ்கள் அணிவதன் மூலம் தவிர்க்கலாம்” என்றும் வைத்தியர் தெரிவித்தார்.
நேரடி சூரிய ஒளியினால் வாந்தி, தலைசுற்றல் அல்லது மயக்கம் ஏற்படலாம் எனவும்,அவ்வாறு இருப்பின் மருத்துவரிடம் மருத்துவ சிகிச்சை பெறுவது இயல்பானது மற்றும் சிறந்தது என தெரிவித்துள்ளார்.
எனவே, நீரிழப்பைத் தடுக்க மக்கள் மற்றும் குழந்தைகளுக்கு தண்ணீர் மற்றும் திரவங்களை பருகுமாரும் மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.
