முட்டையின் விலையை பத்து ரூபாவால் குறைக்க முடியும், எனினும் வர்த்தகர்கள் முட்டையை கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக விற்பனை செய்வதாக அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கத்தின் செயலாளர் அனுர மாரசிங்க தெரிவித்துள்ளார். அது தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ள அவர், பண்ணைகளில் தற்போது 45 ரூபாவுக்கு முட்டையை விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:
முட்டை ஒன்றுக்கான விலையை ஏழு ரூபாவுக்கும் பத்து ரூபாவுக்கும் இடயைில் விலை குறைப்பை மேற்கொள்ள முடியும். எனினும் தற்போது வர்த்தகர்கள் அதனை விட அதிக விலைகளுக்கு முட்டைகளை விற்பனை செய்து வருகின்றனர்.
பல்வேறு பொருட்களின் விலைகளும் சற்று குறைவடைந்து வரும் நிலையில், முட்டை விலையையும் குறைக்க முடியும். அதனை விடுத்து வர்த்தகர்கள் முட்டையை கட்டுப்பாட்டு விலைக்கும் அதிகமாக விற்பனை செய்து வருகின்றனர்.
அது தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
