அடுத்தவருடம் ஜனவரி மாதம் முதல் அரச நிறுவனங்களிடமிருந்தும் தாமத கட்டணம் அறவிட முடிவு

#sri lanka #water #board #Newsinfirst

#sri lanka #water #board #Newsinfirst

நீர்க் கட்டணத்தை தாமதமாக செலுத்தும் அரச நிறுவனங்களிடமிருந்தும் எதிர்காலத்தில் தாமதக் கட்டணத்தை அறவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அடுத்தவருடம் ஜனவரி மாதம் முதல் இந்த தாமதக்கட்டணத்தை அறவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த சபையின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் அரச நிறுவனங்களின் நீர்க்கட்டணத்தை அறவிடும் போது, தாமதக் கட்டணங்கள் அறவிடப்படுவதில்லை. அரச நிறுவனங்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்பட்டிருந்தது, எனினும் தற்போது நிலையில்,அரச நிறுவனங்களிடமிருந்தும் தாமதக் கட்டணத்தை அறவிட நீர்வழங்கல் வடிகாலமைச்சு தீர்மானித்துள்ளது.

நீர்க்கட்டணம் தொடர்பான பட்டியல் கையளிக்கப்பட்டு 90 தினங்களுக்குள் அதனை செலுத்துவதற்கு அரச நிறுவனங்கள் நடவடிக்கையெடுக்க வேண்டும். அவ்வாறில்லாவிட்டால் அந்நிறுவனத்திடமிருந்து தாமதக் கட்டணம் அறவிடப்படும்.

இதுதொடர்பில், விரைவில் சுற்றிக்கையொன்றை வெளியிடுவதற்கும் நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்தது.

Exit mobile version