04 மாதங்களில் அரசாங்கம் சுமார் 1,150 பில்லியன் ரூபாய்களை செலவிட்டுள்ளதாக ஆய்வில் தகவல்!

#srilanka #Newsinfirst

#srilanka #Newsinfirst

புதிய வரிகளை விதிக்காமல் அரச பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கத்திடம் குறிப்பிட்ட தொகை இருக்க வேண்டும் என விசேட ஆய்வில் தெரியவந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் இலங்கை பெற்றுள்ள கடன் தொகையானது இவ்வருடத்தின் மொத்த அரசாங்க செலவீனத்தைவிட அதிகமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, அரசாங்கத்தின் ஏனைய செலவுகளுக்காக எஞ்சியிருக்கும் பணம் தொடர்பில் குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் இல்லை என பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

இந்த 04 மாதங்களில் அரசாங்கம் சுமார் 1,150 பில்லியன் ரூபாய்களை செலவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version