போலி ரூ. 5,000 நாணயத்தாளுடன் மூன்று இளைஞர்கள் கைது

போலி 5,000 ரூபா நாணயத்தாள் வைத்திருந்த சந்தேக நபர்கள் மூவரை இராஜாங்கனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றுக்கமைய நேற்று முன்தினம் இராஜாங்கனை பொலிஸ் பிரிவினர், இராஜாங்கனை சந்திப்பகுதியில் நடத்திய சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் மூவரை கைது செய்துள்ளதுடன், போலி 5,000 ரூபா நாணயத்தாளொன்றையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இராஜாங்கனையை வசிப்பிடமாக கொண்ட 18, 23, 26 வயதுடயவர்கள் என்பது ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

கைதானவர்களில் இருவர், போலி நாணயத்தாள்களை அச்சிட்டு வழங்கியவர்கள் என்பது பொலிஸார் நடத்திய மேலதிக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளும் இராஜாங்கனை பொலிஸாரும் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version