அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெற பிரபல தெலுங்கு நடிகரிடம் இருந்து ரூ. 25 கோடி கடன் வாங்கியிருக்கிறார் சமந்தா என தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல தெலுங்கு நடிகர் ஒருவர் சமந்தாவுக்கு ரூ. 25 கோடி கடன் கொடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மயோசிடிஸ் எனும் அரிய வகை நோய்க்கு சிகிச்சை எடுத்து வருகிறார் சமந்தா. இந்நிலையில் மேல் சிகிச்சை பெற வசதியாக நடிப்பில் இருந்து 6 மாத காலம் பிரேக் எடுத்திருக்கிறார். பிரேக் எடுத்த கையோடு தன் தோழியுடன் இந்தோனேசியாவுக்கு சென்று ஊர் சுற்றிப் பார்த்தார். இந்நிலையில் சமந்தா பற்றி தெலுங்கு ஊடகங்கள் ஒரு பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளன.
மேல் சிகிச்சை பெற அமெரிக்கா செல்கிறார் சமந்தா. சிகிச்சை செலவுக்காக தெலுங்கு திரையுலகை சேர்ந்த பிரபல ஹீரோ ஒருவர் ரூ. 25 கோடி கடனாக கொடுத்திருக்கிறார் என தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த நடிகர் யார் என்பதை தெரிவிக்கவில்லை. இருப்பினும் இந்த தகவலை சமந்தா உறுதி செய்யவில்லை.
பாலி வெகேஷனுக்கு பிறகு சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறாராம் சமந்தா. ஆனால் சமந்தாவிடம் இல்லாத பணமா?. அவர் ஏன் வேறு யாரிடமோ கடனம் வாங்க வேண்டும். கையில் காசு இல்லாமல் இருந்தால் அவர் எப்படி தோழியுடன் பாலிக்கு சென்றிருப்பார் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசியாவுக்கு சென்றதில் இருந்து தொடர்ந்து புகைப்படங்கள், வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்தார் சமந்தா. மேலும் 4 டிகிரி செல்சியஸ் குளிரில் ஐஸ் பாத் எடுத்தார். அந்த வீடியோவை இன்ஸ்டா ஸ்டோரீஸில் வெளியிட்டார். தன் தோழியுடன் சேர்ந்து டான்ஸ் ஆடிய வீடியோவையும் போஸ்ட் செய்திருந்தார் சமந்தா என்பது குறிப்பிடத்தக்கது.
