ஸ்ட்ரிக்ட் இயக்குநரிடம் சிக்கித் தவிக்கும் வாரிசு நடிகர்!

ஸ்பாட்டில் பிரபல இயக்குநரிடம் சிக்கி கொண்டு தவித்து வருகிறாராம் அந்த வாரிசு நடிகர்.

ஸ்ட்ரிக்ட் இயக்குநர்

முதல் படத்திலேயே விருதுகளை குவித்தவர் அந்த ஸ்ட்ரிக்ட் இயக்குநர். படப்பிடிப்பில் சொன்னதை செய்யா விட்டால் யார் என்னவென்றெல்லாம் பார்க்க மாட்டார். கோபத்தில் இயக்குநரின் கை கூட பேசும் . விருது இயக்குநர், அவரது படத்தில் நடித்தால் பெயருக்கும் புகழுக்கும் கேரண்டி என பல நடிகர் நடிகைகள் அவரது படத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.


அப்செட்
அதேநேரத்தில் பெரிய நடிகர்கள் அவருக்கிட்டலாம் வேலை பார்ப்பது கஷ்டம் என ஓரங்கட்டி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக ஸ்ட்ரிக்ட் இயக்குநர் இயக்கத்தில் பெரிதாக படங்கள் வெளியாகவில்லை. போதா குறைக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பின்னடைவால் அப்செட்டில் இருந்தார் இயக்குநர்.

வாரிசு நடிகர்

இதனைப் பார்த்த அவரால் வளர்ந்த பிரபல வாரிசு நடிகர் அவருக்கு தனது தயாரிப்பிலேயே வாய்ப்பு கொடுத்தார். ஆனால் அவரிடமும் வேலையை காட்டினாராம் இயக்குநர். இதனால் அந்த வாரிசு பாதியிலேயே கழண்டு கொள்ள, மற்றொரு வாரிசு நடிகரை கமிட் செய்த இயக்குநர் அவரை வச்சு செய்து வருகிறாராம்.

முடித்தால் போதும்

பெயர் பெற்ற இயக்குநர், இவரது படத்தில் நடித்தால் தனது கெரியர் ஸ்ட்ராங் ஆகும் என்று எண்ணிய அந்த வாரிசு நடிகர் பல்லைக் கடித்துக் கொண்டு சமாளித்து வருகிறாராம். எப்படியாவது இந்த புராஜெக்ட்டை முடித்துவிட்டு கரை சேர்ந்தால் போதும் என நட்பு வட்டத்திடம் புலம்பி வருகிறாராம் வாரிசு நடிகர்.


எப்படி இருக்குமோ?

படப்பிடிப்பில் கையில் பிரம்பில்லாத வார்த்தியாராய் அலறவிட்டு வருகிறாராம் இயக்குநர். இயக்குநர்தான் இவ்வளவு ஸ்ட்ரிக்ட் என்றால் அதற்கு மேல் உள்ளார்களாம் அவருடைய அஸிஸ்ட்டெண்டுகள். ஏற்கனவே இயக்குநரின் பெயர் பெரும் டேமேஜ் ஆன நிலையில் தற்போது படப்பிடிப்பு தளத்தில் நடக்கும் ரகளையால் இயக்குநரின் அடுத்தடுத்த படங்கள் எப்படி இருக்கப்போகிறோ என்று முனுமுனுக்கிறார்கள் கோடம்பாக்கத்தினர்.

Exit mobile version