விஜய், ரஜினிக்கே சவால் விடும் ஷாருக்கான்..முன்பதிவில் சாதனை படைத்த ஜவான்..இத்தனை கோடியா ?

அட்லீயின் இயக்கத்தில் ஷாருக்கானின் நடிப்பில் உருவாகும் ஜவான் திரைப்படம் முன்பதிவில் சாதனை படைத்துள்ளது. முன்பதிவின் மூலமே ஜவான் திரைப்படம் பல கோடி வசூலித்துள்ளதாக தகவல் வந்துள்ளது

பாலிவுட் திரையுலகில் சூப்பர்ஸ்டார் நடிகராக வலம் வருபவர் தான் ஷாருக்கான்.இவர் என்னதான் பாலிவுட் நடிகராக இருந்தாலும் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராக இருந்து வருகின்றார். குறிப்பாக ஷாருக்கானை தெரியாத தமிழ் ரசிகர்களே இல்லை எனலாம். உயிரே, ஹே ராம் போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் நிரந்தர இடம் பிடித்தார் ஷாருக்கான்.

அந்த வகையில் தற்போது ஜவான் என்ற படத்தின் மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்களை மகிழ்விக்க வருகின்றார். அட்லீயின் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் என்னதான் பாலிவுட் படம் என சொன்னாலும் அதில் தமிழ் கலைஞர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர். நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு, அனிருத் என பல தமிழ் கலைஞர்கள் ஜவான் படத்தில் பணியாற்றியுள்ளதால் இப்படத்திற்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது.

இந்நிலையில் விஜய்யை வைத்து ஹாட்ரிக் வெற்றியை கொடுத்த அட்லீ ஷாருக்கானை ஜவான் படத்தின் மூலம் இயக்கியுள்ளார். தொடர் தோல்விகளில் இருந்த ஷாருக்கான் பதான் என்ற படத்தின் மூலம் வெற்றிப்பாதைக்கு திரும்பினார். இதையடுத்து தற்போது ஜவான் படத்தின் மூலம் தொடர் வெற்றிகளை குறிவைத்து களமிறங்க இருக்கின்றார்.

Exit mobile version