ஆறே நாளில் ரூ. 600 கோடி வசூலித்த ஜவான்: இந்தியாவில் மட்டும் ரூ. 346 கோடிப்பு

ஷாருக்கானின் ஜவான் படம் ரிலீஸான 6 நாட்களில் உலக அளவில் ரூ. 600 கோடி வசூல் செய்திருக்கிறது.

அட்லி இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த ஜவான் படம் செப்டம்பர் 7ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. படம் ரிலீஸான அன்றே இந்தியாவில் மட்டும் ரூ. 75 கோடி வசூல் செய்தது. இந்நிலையில் தியேட்டருக்கு வந்த ஆறே நாட்களில் உலக அளவில் புது சாதனை படைத்திருக்கிறது ஜவான்.

ஜவான் படம் வெளிவந்த வெறும் ஆறு நாட்களில் உலக அளவில் ரூ. 600 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் இந்தியாவில் ரூ. 350 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஜவான் படம் திரைக்கு வந்த முதல் நாளில் உலக அளவில் ரூ. 129.06 கோடி வசூல் செய்தது. ரிலீஸான அன்றே அதிகம் வசூல் செய்த இந்தி படம் என்கிற பெருமையை பெற்றிருக்கிறது ஜவான்.

வேலை நாளான நேற்று ஜவான் இந்தியாவில் ரூ. 26.50 கோடி வசூல் செய்திருக்கிறது. இதுவரை இந்தியாவில் ரூ. 345. 58 கோடி வசூலித்திருக்கிறது. வசூல் விபரங்களை பார்த்து அட்லியை நம்பி ஜவான் படத்தை தயாரித்த ஷாருக்கானும், அவரின் மனைவி கௌரியும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முன்னதாக ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் படம் ரூ. 1000 கோடி வசூல் செய்து பாலிவுட்டில் புது சாதனை படைத்தது. அந்த சாதனையை ஜவான் முறியடிக்குமா என பலரும் கேட்டு வந்தார்கள். பதானை ஜவான் கண்டிப்பாக முந்தும் என்பது தற்போது தெளிவாக தெரிந்துவிட்டது.

Exit mobile version