ஒருநாள் போட்டித் தரவரிசையில் உலகின் நம்பர் 1 அணியான பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி 12வது முறையாக ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
நடப்பு சாம்பியனான இலங்கை அணி, இந்தியாவை ஞாயிற்றுக்கிழமை ஆர் பிரேமதாசா மைதானத்தில் எதிர்கொள்ளவிருக்கின்றது.
இலங்கை அணி சார்பில் குசல் மெண்டிஸ் 91 மற்றும் அசலங்க 49 ரன்களை குவித்தனர். இறுதியாக 42 ஓவர்களில் 252 ஓட்டங்களை பெற்று இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
